தீபாவளிக்கு வெளியாகும் சிங்கம்-3 படத்தின் டீசர்..!

maxresdefault

நடிகர் சூர்யா நடித்ததில் இவருக்கு நல்ல பெயரையும், அடுத்த கட்ட நடிகராக மாற்றிய படம் “சிங்கம்”. இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கினார், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததால் ஹரியுடன் மீண்டும் சேர்ந்து சிங்கம்-2 படத்தில் நடத்தார் அதிர்ஷ்டவசமாக இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றியை ருசித்தது இதனால் சூர்யா வெற்றி நாயகன் என்று கூட அழைக்கப்பட்டார்.

ஆனால் அதன் பின் சூர்யாவின் நடிப்பில் வந்த எந்த திரைப்படமும் சரிவர ஓட வில்லை அதிலும் இவருக்கு மாபெரும் சறுக்கலை தந்த படங்கள் “அஞ்சான்”, “மாஸ்” ஆகிய படங்களால் சூர்யாவின் மார்க்கெட் மலமலவென சரிந்து போனது, இதனால் தான் இழந்த மார்கெட்டை மீண்டும் பெற வேண்டும் என்பற்காக மீண்டும் இயக்குநர் ஹரியுடன் சிங்கம்-3 படத்தை நடத்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது, அது ரசிகர்களிடமும், மக்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது, இதனால் சூர்யா தனது ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக இத்திரைப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளார்களாம், இந்த செய்தியை கேட்ட பின்னர் அவரின் ரசிகர்கள் படு குஷியில் உள்ளார்களாம்.

இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். மீண்டும் இந்த அதிஷ்ட்ட கூட்டணி வெள்ளுமா எனபதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.