பயணிகளிடம் கடுமை : ஊழியர்கள் மீது சிங்கப்பூர் ஏர்லன்ஸ் விசாரணை

சிங்கப்பூர்

சிங்கப்பூர் – கொல்கத்தா விமானத்தில் பயணிகளிடம் கடுமையாக நடந்துக் கொண்ட ஊழியர்கள் மீது விசாரணை நடத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி அன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கொல்கத்தாவுக்கு  புறப்படத் தயாராக இருந்தது.   அதில் பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்துள்ளனர்.  தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 3 மணி நேரம் அந்த விமானம் அங்கிருந்து கிளம்பவில்லை.   இதனால் பயணிகள் ஊழியர்களிடம் காரணம் கேட்டுள்ளனர்.

ஆனால் ஊழியர்கள் சரியான பதில் கூறவில்லை.   அத்துடன் ஊழியர்கள் பயணிகளிடம் கடுமையாக நடந்துக் கொண்டுள்ளனர்.   பயணிகளை இருக்கையிலேயே சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருக்க வேண்டும் என மிரட்டி உள்ளனர்.  கீழே இறங்கப் போன பயணிகளை அவ்வாறு இறங்கினால் மீண்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஊழியர்கள் மேலும் மிரட்டி உள்ளனர்.

இந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்த சாந்தினி தவுலத்ரமணி என்னும் பெண் அதை முகநூலில் பதிந்துள்ளார்.   அதை பலரும் ஷேர் செய்யவே அது வைரலாகி உள்ளது.   இந்த வீடியோவைக் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகத்தினர் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தம் தெரிவித்து கடுமையாக நடந்துக் கொண்ட ஊழியர்கள் மீது விசாரனை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.