சிங்கப்பூர்:

பள்ளிக் குழந்தைகளுக்கு ரேங்க் முறையை முற்றிலும் அகற்றியதோடு, பாஸ், பெயில் முறையையும் இந்த ஆண்டோடு முடிவுக்கு கொண்டு வர சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.


சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங்க் யே குங் இது குறித்து கூறும்போது, ” தேர்வு எழுதி ரேங்க் போடும் முறை நிறுத்தப்படுகிறது. யார் முதல் ரேங்க், யார் கடைசி ரேங்க் என்ற விவரம் தெரியாது. புதிய ரிப்போர்ட் கார்டில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்படும்.

முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு தேர்வு இல்லை. வகுப்புகளில் முழுமையான விவாதம் நடத்தப்படும். விநாடிவினா மற்றும் வீட்டுப் பாடங்கள் அடிப்படையில் மாணவர்களின் திறனை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வார்கள்.

மதிப்பெண் மற்றும் கிரேடுக்கு பதிலாக தரமான பயிற்றுவித்தல் நடைபெறும். கற்பதை போட்டியாக நினைக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களது திறன், பலம், பலவீனத்தை அறிந்து கொள்ள ரிப்போர்ட் புத்தகம் வைக்கப்படும் என்றார்.