சிங்கப்பூர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தனது 50 லட்சம் மக்களுக்கு, ப்ளூடூத் வசதியுள்ள தொடர்பறியும் டோக்கன்களை வழங்கத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர் அரசு.

இதை கயிறு மூலம் மாட்டிக்கொள்ளவும் முடியும் அல்லது சாதாரணமாக நம்மிடம் வைத்துக்கொள்ளலாம். செயலியைப் போன்று, பிற பயனர்களின் சாதனங்களைப் பார்க்க ப்ளூடூத் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அந்த சாதனங்களுடன் எந்தத் தொடர்பையும் பதிய முடியும்.

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தாத வயதான நபர்களுக்கு இந்த சாதனம் வசதியானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கூட்டமான ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் ஜிம்கள் போன்ற சவாலான இடங்களில், இந்த சாதனம் கண்டறிவதற்கு துணைபுரிந்து, சிங்கப்பூரின் பொருளாதாரத்தை மீண்டும் பழையபடி திறப்பதற்கு உதவி செய்யும் என்று கூறப்படுகிறது.