சிங்கப்பூர் : பிளாஸ்டிக் உபயோகத்தை முழுவதும் நிறுத்திய கே எஃப் சி

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ள கே எஃப் சி நிறுவனம் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை நிறுத்தி உள்ளது.

சிங்கப்பூரில் கே எஃப் சி எனப்படும் கெண்டக்கி ஃப்ரைட் சிக்கன் நிறுவனத்தின் 84 விற்பனை மையங்கள் அமைந்துள்ளன.   இவைகளில் பிளாஸ்டிக்கினால் ஆன தட்டுக்கள், கப்புகள், ஸ்டிராக்கள் மற்றும் ஸ்பூன்கள் வழங்கப்படுகின்றன.   அவைகள் ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியும் வகையை சார்ந்தவை.    இவ்வாறு ஒரு வருடத்துக்கு சுமார் 17.8 டன்கள் பிளாஸ்டிக் உபயோகிக்கப்படுகிறது.

இதை குறைக்க கே எஃப் சி நிறுவனம் திட்டமிட்டது.  அதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து கே எஃப் சி விற்பனை மையங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை நிறுத்தி உள்ளனர்.  இந்த நிறுத்தி வைப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆயினும் பழரசங்கள் போன்ற குளிர் பானங்களை பார்சலாக வாங்கும் போது பிளாஸ்டிக் கப்புகள் உபயோகிக்கப்படுகின்றன.      அதே நேரத்தில் உணவு உண்ணும் போது அளிக்கப்படும் காகித கப்புகள் பிளாஸ்டிக் கோட்டிங் செய்யப்பட்டதாக உள்ளன.   விரைவில் அவையும் மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

குளிர்பானங்களான பெப்சி போன்றவைகளுக்கு அந்த நிறுவனப் பெயர் பொருத்திய பிளாஸ்டிக் கப்புகளை வழங்க வேண்டும் என அந்நிறுவனங்கள் கூறி  உள்ளதால் அங்கும் பிளாஸ்டிக் கப்புகளே உபயோகப்படுத்தப் படுகின்றன

இதன் மூலம் கே எஃப் சி பிளாஸ்டிக் இல்லா உலகத்துக்கு முதல் அடி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.