விரைவில் சிங்கப்பூரின் சாலைகளில் ஓட்டுநரில்லா பேருந்துகள் வலம் வரவிருக்கின்றன. பல நாடுகளும் ஓட்டுநரில்லா கார்களை முயற்சித்து பாத்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சிங்கப்பூர் ஒரு படி முன்னேறி ஓட்டுநரில்லா நகரப்பேருந்தை தனது சாலைகளில் செலுத்தி பரிசோதிக்கவிருக்கிறது. நன்யாங் தொழில்­­­நுட்ப பல்­­­கலைக் கழ­­­கத்­­­திற்­­­கும் (என்டியு) அதன் அருகில் இருக்­­­கும் பைனியர் எம்­­­ஆர்டி நிலை­­­யத்­­­திற்கும் இடையே இந்தப் புதிய சேவை சோதனை அடிப்­­­படை­­­யில் அறி­­­மு­­­க­­­மா­­­க­­­வி­­­ருக்­­­கிறது.

driverless

இப்பகுதியில் ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஓட்டுநரில்லாத ஷட்டில் பேருந்துகள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிற்து. இப்பேருந்துகளுக்கு பசுமை பேருந்துகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. கூகுள் மேப்பை அடிப்படையாகக் கொண்டு இப்பேருந்துகள் இயங்கும்.
சிங்கப்பூரின் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், வாகன நெருக்கடியை குறைக்கவும், காற்று மாசடைவதை தடுக்கவும் இம்முயற்சி மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக நன்யாங் தொழில்­­­நுட்ப பல்­­­கலைக் கழ­­­கத்­­­தின் துணை வேந்தர் லாம் கின் லாங் தெரிவித்தார்.