சிங்கப்பூர்: கொரோனாவைக் கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு அதன் மக்களுக்கு வழங்கிவரும் கண்டறியும் டோக்கனில் உள்ள பேட்டரி, 9 மாதங்கள் வரை உழைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த டோக்கனை ஜீன்ஸ் பேன்ட்டின் பின் பாக்கெட்டில் எளிதாக வைத்துவிட முடியாது என்றும், அதன் அளவிற்கு முன்புற பாக்கெட்டுதான் சரிவரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த டோக்கனை, ஒருவர் தனது பையில் கிளிப் போட்டு வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். மொபைல் செயலியைப் பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த டோக்கனைப் பயன்படுத்தலாம். இதன்மூலம், அதிகளவு மக்களை சென்றடையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பல நாடுகள் இந்த விஷயத்தில் மொபைல் செயலியைப் பயன்படுத்த தொடங்கி, தனியுரிமைப் பிரச்சினை மற்றும் வேறுசில தொழில்நுட்ப சிக்கல்களால் அதைக் கைவிட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.