தீபாவளி பண்டிகைக்கு களைகட்டிய சிங்கப்பூர்…

 

சிங்கப்பூர் :

வம்பர் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட இருக்கிறது.

தீபாவளிப் பண்டிகை சமீப ஆண்டுகளாக இந்தியாவில் மட்டுமல்லாது, உலகெங்கும் இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி விழாவில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாகி விட்டது.

இதேபோல், இந்தியர்கள் அதிகம் வாழக்கூடிய சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சிங்கப்பூர் அரசு அங்குள்ள சாலைகளில் மின்விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரித்துள்ளது.

இங்குள்ள சீரங்கோன் சாலையில், இந்தியப் பொருட்கள் அனைத்தும் இந்திய பாரம்பரியத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கும் என்பதால், பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும்.

அதே நேரத்தில், சீனர்கள் உள்ளிட்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்குள்ள கடைத் தெருக்களை பார்ப்பதற்கு கூடுவார்கள் என்பதால் இந்த சாலைகள் விழாக்கோலம்பூண்டிருக்கும்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக அண்டை நாடான மலேசியாவில் இருந்து கூட மக்கள் வர அனுமதி மறுக்கப்படுவதால், மக்கள் கூட்டம் பெருமளவு இல்லையென்றாலும், லிட்டில் இந்தியா எப்பொழுதும் போல் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தாயாராகி வருகிறது.