டிக் டாக் சவாலில் பற்களை இழந்த அமெரிக்கப் பாடகர் ஜேஸன் டெரூலோ….!

--

ஊரடங்கு சமயத்தில் மக்களை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு சுவாரசியமான, அவ்வப்போது சில ஆபத்தான வீடியோக்களையும் ஜேஸன் டெரூலோ டிக் டாக்கில் பதிவேற்றி வருகிறார்.

சமீபத்தில் ஒரு சவாலில் தோற்றதால் ஒரு பக்கம் புருவத்தை வழித்து எடுத்துள்ளார் .

அதை தொடர்ந்து மின்சார ட்ரில் ஒன்றில் சோளக் கதிரைச் செருகி வைத்து, அந்த ட்ரில் வேகமாகச் சுற்றும்போது சோளத்தைச் சாப்பிடும் ஒரு சவாலை டிக் டாக்கில் ஜேஸன் டெரூலோ மேற்கொண்டார்.

View this post on Instagram

Don’t try this 😭😭

A post shared by Jason Derulo (@jasonderulo) on

சோளம் வேகமாகச் சுற்ற, அதைச் சாப்பிட வாயை வைக்கிறார் ஜேஸன். ஆனால் சட்டென்று வலியில் துடித்து வாயை எடுக்கிறார். அவரது முன் பற்கள் உடைந்திருக்கின்றன.

ஜேஸனின் இந்த வீடியோ வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.