பிரபல பாலிவுட் பாடகர் குமார் சானுவுக்குக் கொரோனா தொற்று….!

பாலிவுட் சினிமாவின் முன்னணிப் பாடகர்களுள் ஒருவர் குமார் சானு. இந்தி, மராத்தி, போஜ்புரி, தெலுங்கு, உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். சாஜன் என்ற இந்திப் படத்தின் தமிழ் டப்பிங் படத்தில் தமிழிலும் கூட சில பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்நிலையில் குமார் சானு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், குமார் சானு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாரா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

குமார் சானு விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.