எஸ்.பி.பாலசுப்ரமணியம் 74 வது பிறந்ததினம்.. திரையுலகினர். ரசிகர்கள் வாழ்த்து..

திரைப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இன்று 74 வது பிறந்த தினம். இதையொட்டி அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் இணைய தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

1966ம் ஆண்டு முதல் தனது பாடல் பணியை தொடங்கியவர் இன்றுவரை ஓயாமல் தன் உழைப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார். இதுவரை 40 ஆயிரம் பாடல்கள் அவர் பாடியிருக்கிறார். அதாவது வருடத்துக்கு 930 பாடல்கள் அல்லது ஒருநாளைக்கு 3 பாடல்கள் என்று கணக்கெடுத்துக்கொள்ளலாம். இதுதவிர தனி ஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறார். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் இன்னும் பல்லாண்டு வாழ பத்திரிகை.காம் தனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறது.