எஸ்.பி.பி சிகிச்சை அறையில் ஸ்பீக்கர் செட்டப்.. அவர் பாடிய பாடல்கள் ஒலிபரப்பி சிகிச்சை..

ருத்துவ சிகிச்சை தவிர குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இசை சிகிச்சையும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அளிக்கப் படுகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டதாக முதலில் கூறினார் பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம். ஆனால் இரண்டு நாளில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டி ருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது உடல்நிலை தேறி வருகிறார் என்று அவரது மகன் சரண் தெரிவித்திருக் கிறார்.
மருத்துவமனையின் 6வது மாடியில் சிகிச்சை பெற்று வரும் எஸ்பிபி. டாக்டர் கள் அளிக்கும் மருத்துவ சிகிச்சை தவிர அவரது பாடல்களை ஒலிபரப்பினால் அதில் அவர் விரைந்து குணம் அடைவார் என்று குடும்பத்தினர் கூறினார்களாம் இதையடுத்து ஸ்பீக்கர் மூலம் அவர் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள். பாலுவும் இசையும் உடலும் உயிரும் போல ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது என்று அவரது ரசிகர் தெரிவித்திருக்கின் றனர்.

You may have missed