இன்று தன் பிறந்தநாளை கொண்டாடும் காந்த குரல் பாடகி சுசித்ரா….!

ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த சுசித்ரா பாடகியாக பிரபலமானதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தும் உள்ளார்.

இவர் பாடிய “மே மாசம் 98” என்ற பாடல் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்ததோடு பல ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.

தனித்துவமான பாடல்களின் மூலம் இன்றுவரை தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் சிறந்த பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த பாடகியாக பன்முகங்களைக் கொண்டு விளங்கி வரும் பாடகி சுசித்ரா ஆகஸ்ட் 14 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் கூறி மகிழ்வித்து வருகின்றனர்.