பாடகி சுசித்ரா வெளியிட்ட தடாலடி வீடியோ.. போலீஸ் அராஜகம் பற்றி பரபரப்பு..

பாடகி சுசித்ரா பேசினாலே அது ஒருசில பிரபலங்களின் வயிற்றை கலக்கிவிடும். இம்முறை அவர் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ பலரது இதயத்தை உலுக்கி இருக்கிறது. சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பினிக்ஸ் இருவரையும் போலீசார் அடித்து கொன்ற சம்பவத்தை அப்படி யே புட்டுபுட்டு வைத்திருக்கிறார். நிர்வாணமாக்கி இருவரையும் அடித்து நார் நாறாக கிழித்திருக்கும் கொடூரத்தை சுசித்ரா விளக்கி இருப்பதுடன் இந்த சம்பவம் அமெரிக்காவில் கருப்பினத்த வரை போலீஸ் அடித்துகொன்றதற்கு சமம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


ஏற்கனவே தந்தை மகன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சுசித்ரா வின் வீடியோ பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் போலீஸாரின் சஸ்பெண்டு மட்டும் தீர்வாகாது தகுந்த நீதி வழங்கப் பட வேண்டும் என்று குறிப்பிட்டி ருக்கும் சுசி, இந்த வீடியோவை ஷேர் செய்யும்படி கேட்டதால் 1 மில்லிய க்கும் மேலான பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறது.
வீடியோவில் ஆங்கிலத்தில் பேசியிருக் கிறார் சுசித்ரா.