இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.

https://www.facebook.com/singer.sunitha/videos/365368327786140/

இந்நிலையில், தனக்குக் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார் பிரபல பின்னணி பாடகி சுனிதா உபத்ரஷ்தா. 1995 முதல் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் ‘பத்ரி’, ‘காதல் ரோஜாவே’ உள்ளிட்ட சில படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.