விபத்துக்குள்ளான பிரபல பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸின் கார்….!

பிரபல பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸின் கார் விபத்துக்குள்ளானது.

திங்கட்கிழமை அன்று இரவு 11.30 மணியளவில் திருவனந்தபுரத்திலிருந்து தனது காரில் விஜய் யேசுதாஸ் திரும்பி வந்து கொண்டிருந்தார். உடன் அவரது நண்பர் இருந்தார். அதே நேரத்தில் திருக்காட்டுச்சேரியிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னொரு கார் திருவாரூர் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் சட்டென நுழைய இருவரது கார்களும் மோதின.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும் இரண்டு கார்களின் முன் பக்கங்களும் கடுமையான சேதத்துக்கு உள்ளாயின.