தமிழகத்தில் ஒரே நாளில் நாடாளுமன்ற தேர்தல்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே நாளில் நடத்த தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப் படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், வரும் 8ந்தேதி மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் தொகுதி உடன்பாடு, கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழகத்தில் ஒரே நாளில் நாடாளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தப்படும் என்று கூறினார்.

மேலும், தேர்தல் கூட்டணி குறித்து அப்போது விவாதிக்கப்படும் என்றவர், பாஜக, பாமக, தேமுதிக  கட்சிகளுடன் கூட்டணி  பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுடன் 20 சட்டமன்றத் தொகுதி களுக்கும் இடைத்தேர்தலை ஒரே நாளில்  நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி