Random image

சிங்கள – தமிழ்ப் பெண்கள் இருவரும் ஒன்றே..

 இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ்.டி. நளினி ரத்தினராஜ் (S T Nalini Ratnarajah ) அவர்களின் முகநூல் பதிவு..
a

 “தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் சிங்கள பதிப்பு வந்ததிலிருந்து , அட்டைபடத்திலிருந்த தமிழினியின் புகைப்படத்தைபற்றி விசித்திரமான வேடிக்கையான விமர்சனங்களை காண கிடைக்கிறது. முக்கியமானது தமிழினி சிங்கள பெண்போல் காட்சி தருகிறார் , இதை ஏற்கமுடியாது என்பதான விமர்சங்கள்.

இது உண்மையில் வேடிக்கையாக உள்ளது . ஏன் தமிழ் பெண்கள் சிங்கள பெண்போல் உடை உடுத்த கூடாது? அவளும் பெண்தானே ? அவளும் நாங்களும் இந்த இலங்கயில்தானே வாழ்கின்றோம். சிங்கள மக்களுடன் வேலை செய்கின்றோம் , படிக்கின்றோம், உணவு உண்ணுகிறோம் , பிரயாணம் பண்ணுகிறோம் , சிங்கள மக்களுடன் ஒருமித்து மனித, பெண் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றோம், எங்களுக்கு தோள் கொடுப்பதெல்லாம் சின்ஹ்ள பெண்கள் தான்.

கணவனை இழந்த சிங்கள பெண்களையும் தமிழ் பெண்களையும் சமூகம் மங்கல காரியாங்களில் பங்கெடுக்க அனுமதிக்கவில்லையே ? கணவன் இல்லாதவள் , கணவனை தின்றவள், ராசி இல்லாதவள் என்ற பட்டம் தமிழ் சிங்கள பெண்களுக்கு பாரபட்சமில்லாமல் தானே வழங்கபடுகிறது .

ஒரு சிங்கள கிராமத்தில் பொது போக்குவத்தில் பயணம் செய்த சிங்கள பெண், இறந்த ராணுவ வீரனின் துணைவிக்கு பக்கத்தில் இருக்க வாய்ப்பு கிடைத்ததும் “ இவள் கணவனை தின்றவள் எனக்கு பக்கத்தில் இருக்காதே” என்று மறுத்த கதை எத்தனை பெருக்கு தெரியும் ? ஆண் துணை இல்லாவிட்டால் இவளை இலகுவில் படுக்கைக்கு கொண்டுவரலாம் என்ற பார்வை ஒன்றாகதனே உள்ளது , அல்லது இவள் நடத்தை கேட்ட பெண் என்ற பார்வை இரு இனத்து பெண்களிலும் சமனாகத்தனே படுகிறது.

போர் முடிந்தாலும் போரினால் ஏற்பட்ட வடுக்களை சுமப்பவர்கள் தமிழ் பெண்கள் மட்டுமல்ல சிங்கள பெண்களும் தான் , அதன் வலிகளை தினம் தினம் சுமப்பவர்கள் அந்த பெண்களே. சமூக கலாச்சார பொருளாதார பிரச்சனைகள் இவ்விரு பெண்களையும் பாரபட்சமில்லாமல் சமநாகத்தானே நடத்துகிறது .

இன்னுமொன்றை கேட்க விரும்புகிறேன் தமிழ் பெண்போல் ஆடை சேலை உடுத்தும் பெண்களை தமிழ் சமூகம் என்ன சமத்துவமாகவா நடத்துகிறது ? தமிழ் பெண்கள் கௌரவத்துடனா நடத்தபடுகிரார்கள்? புங்குடுதீவு வித்தியாவிற்கு நடந்தது உலகம் அறிந்ததே.

நளினி ரத்தினராஜ்
நளினி ரத்தினராஜ்

அதிலும் முன்னைநாள் பெண்போராளிக்களுக்கு இந்த தமிழ் சமூகம் கொடுக்கும் மதிப்பும் கௌரவமும் தான் இப்போது தெரிகிறதே ? அன்று போராடும் வீர பெண்களாக தெரிந்தவர்கள் இன்று வேண்டாத பெண்களாகி போனார்களே? அதிலும் விசேடமாக முன்னைநாள் ஆண் போராளிகளால் திருமணம் செய்யப்பட்டு பின் அவர்களால் தூக்கி எறியபட்ட பெண்களின் நிலைதான் இன்று நாம் பார்கின்றோமே? இதை விட கேவலம் , அதே ஆண் போராளிகளால் தன மனைவியை பார்த்து அவள் நடத்தை கெட்டவள் என்று காரணம் காட்டி தூக்கி எறிந்த கதைகளை யாரிடம் சொல்வது.?

கடைசியாக துவேசம், வன்முறை பேசுபவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் . நாங்கள் இலங்கையர் , இங்கே இம்மக்களுடன் சமாதானமாக சமத்துவமாக வாழ விரும்புகிறோம், தமிழர்களுக்கு சகலவற்றிலும் சமத்துவமான கௌரவமான வாழ்வு கிடைக்கும் வரை போராடுவோம், எங்கள் சந்ததிக்கு அந்த பாக்கியம் கிடைக்கவிடாலும் , அடுத்த சந்ததியை போராடுவதற்கு தயார் படுத்துவோம்.

இலங்கையில் வாழும் பெண்கள் அனைவரும் சமனாக சமத்துவாமாக. பெண் என்ற காரணத்தால் பாரசபாரபட்ச படுத்தபடாமல், பாலியல் வன்முறைக்கும் துன்புறுத்தல்களுக்கும் முகம் கொடுக்காமல் யுத்தமில்லாமல் வாழ நாங்கள் சேர்ந்தே போராடுவோம்.”