சின்மயி சரவெடி:  டி.வி. பிரபலம் ரமேஷ்பிரபா மீது பாலியல் குற்றச்சாட்டு

வைரமுத்து, ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்த பாடகி சின்மயி, தற்போது தொலைக்காட்சி பிரபலம் ரமேஷ்பிரபா மீது பாலியல் குற்றச்சாட்டை வெளியிட்டிருக்கிறார்.

சமீபகாலமாக திரைப்பட, தொலைக்காட்சி பிரபலங்களின் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.  இந்த நிலையில் வைரமுத்து, ராதாரவியை அடுத்து   தொலைக்காட்சி பிரபலம் ரமேஷ்பிரபா மீது பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெண் ஒருவர் தனக்கு அனுப்பிய தகவலை அவரது பெயரை வெளியிடாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயி பதிவிட்டுள்ளார்:

அதில் அந்த பெண்,  தனக்கு 13 வயதாக இருந்தபோது அந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஆடிஷன் சென்றதாகவும், அப்போது டி.வி. பிரபலமான ரமேஷ்பிரபா  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை தொலைக்காட்சியில் பார்க்கும்போதெல்லாம் தனக்கு நிகழ்ந்த அந்த கொடுமைதான் ஞாபகம் வருவதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பல பிரபலங்கள் மீது சரவெடியாக பாலியல் குற்றச்சாட்டுக்களை வீசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் சின்மயி.