ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்ட உத்தரவு ரத்து: தமிழகஅரசு அடுத்த அதிரடி

சென்னை:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆலையின் 2ம் கட்ட விரிவாக்கத்திற்கு  ஒதுக்கப்பட்ட நிலம் குறித்த உத்தரவை ரத்து செய்து அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது தமிழகஅரசு.

ஸ்டெர்லைட் ஆலை 2ம் கட்ட விரிவாக்கப் பணிக்கு 342 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போதை அதை ரத்து செய்து சிப்காட் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

.தூத்துக்குடியில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக 342.22 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நில ஒதுக்கீட்டை சிப்காட் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இதற்கு காரணமாக, ஸ்டெர்லைட்  ஆலையால் ஏற்படும் மாசுபாடுகளையும், தங்கள் உடல்நலம் பாதிக்கப்படு வதையும்  சுட்டிக்காட்டி சம்மந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தியதை சிப்காட் குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்களின் நலன்க ருதி தாமிர உருக்காலையை விரிவுபடுத்துவதற்காக செய்யப்பட்ட நில ஒதுக்கீட்டை ரத்து செய்வதாகவும் வேதாந்தா நிறுவனத்திற்கு சிப்காட் தெரிவித்துள்ளது.

நில ஒதுக்கீட்டிற்காக வேதாந்தா நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் சிப்காட் விதிமுறைகளின்படி திருப்பிஅளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த  16.02.2005, 16.02.2006, 23.09.2009, 23.03.2010  ஆண்டுகளில் ஆலை விரிவாக்கத்துக்கு அதிமுக, திமுக அரசாங்கத்தினால்  ஒதுக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ரத்து செய்வதாக சிப்காட் அறிவித்து உள்ளது.