பிரிஸ்பேன்: கப்பா(‍Gabba) எனப்படும் பிரிஸ்பேன் மைதானத்தில், 5 விக்கெட்டுகளை அள்ளிய ஐந்தாவது இந்திய பெளலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் முகமது சிராஜ்.

மேலும், இந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள வீரர் என்ற பெயரையும் ஈட்டியுள்ளார் சிராஜ்.

பிரிஸ்பேன் மைதானத்தைப் பொறுத்தவரை, கடந்த 1968ம் ஆண்டு எரபள்ளி பிரசன்னா, 1977ம் ஆண்டு பிஷன் சிங் பேடி, 1977ம் ஆண்டு மதன்லால், 2003ம் ஆண்டு ஜாகிர் கான் என 4 வீரர்கள் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்கள். தற்போது அந்த வரிசையில் 5வது வீரராக இணைந்துள்ளார் முகமது சிராஜ்.

இது இவரின் அறிமுக டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 13 விக்கெட்டுகளை சாய்த்து, அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பெளலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு, பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆல்அவுட் ஆகாமல் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.