சொந்த கிராமத்தில் தோல்வி அடைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் உறவினர்

பாதல்

சிரோன்மணி அகாலி தள வேட்பாளரும் முன்னாள் முதல்வரின் உறவினருமான உதய்வீர் சிங் பாதல் அவருடைய சொந்த ஊரான பாதல் கிராம  பஞ்சாயத்து தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

                        பிரகாஷ் சிங் பாதல், சுக்வீர் சிங் பாதல், ஹரிசிம்ரத் கவுர் பாதல்

சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அவர் மகன் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோரின் சொந்த ஊர் பாதல் என்னும் கிராமம் ஆகும்.   இது பஞ்சாப் மாநிலத்தில் ஸ்ரீ முக்த்சர் சாகிப் மாவட்டத்தில் அமைந்துள்ளது.   இந்த கிராமத்தில் மிகவும் புகழ் பெற்ற குடும்பம் பிரகாஷ் சிங் பாதல் குடும்பம் ஆகும்.

பிரகாஷ் சிங் பாதலின் மருமகளும் சுக்வீர் சிங் மனைவியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தற்போது மத்திய அமைச்சராக இருந்து வருகிறார்.    இந்த கிராமத்தில் தொடர்ந்து 25 வருடங்களாக சிரோன்மணி அகாலிதள வேட்பாளரே தலைவராக இருந்து வந்தார்.   இந்த கிராமத்தில் ஒரு பெரிய ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்த உதய்வீர் சிங் பாதல் சிரோன்மணி அகாலிதள வேட்பாளராக களம் இறங்கினார்.

அவரை எதிர்த்து சாமானிய குடும்பத்தை சேர்ந்த ஜாபர்ஜிங் சிங் முக்கா என அழைக்கப்படும் முகா பாதல் காங்கிரஸ் சார்பில் போட்டி இட்டார்.   உதய்வீருக்கு ஆதரவாக முன்னாள்  பஞ்சாப் முதல்வர், மத்திய அமைச்சர் ஆகியோர் கடுமையாக பிரசாரம் செய்தனர்.   ஆயினும் காங்கிரஸ் வேட்பாளர் முகா பாதல் 376 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சொந்த ஊரிலேயே முன்னாள் முதல்வர் மற்றும் மத்திய அமைச்சரின் உறவினர் தோற்கடிக்கப்பட்டதால் சிரோன்மணி அகாலி தளம் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

Thanx : The quint
..