சிறிசேனா முயற்சி தோல்வி : இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடுகிற்து

கொழும்பு

லங்கை அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காண அதிபர் சிறிசேனா நடத்திய அனைத்துக் கட்சிக்  கூட்டம் தோல்வி அடைந்த நிலையில் இன்று பாராளுமன்றம் கூட உள்ளது.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா விலக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை இலங்கை பிரதமர் ஆக்கினார். ரணில் விக்ரமசிங்கே பாராளுமன்றத்தில் தமது ஆதரவை நிரூப்பிக்க முடிவு செய்தார். சிறிசேனா பாராளுமன்றத்தை காலைத்தார். அதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாததால் தோல்வி அடைந்தார். ராஜபக்சேவின் ஆதரவு உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை எதிர்க்க வந்த காவலர்களையும் அவர்கள் தாக்கினார்கள். அவை இன்று வரை ஒத்தி வைக்கபட்டது. அரசியல் குழப்பத்தை முடித்து வைக்க சிறிசேனா நேர்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.

சிறிசேனாவின் இல்லத்தில் நடந்த இக்கூட்டத்தில் ரணில், ராஜபக்சே மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் பங்கேற்றனர், கூட்டத்தில் இரு தரப்பினரும் சமாதான முயற்சிக்கும் ஒத்து வரவில்லை என கூறப்படுகிறது. இக்கூட்டம் தோல்வி அடைந்ததாக ர்ணில் ஆதரவாளர்கள் கூறி உள்ளனர். அத்துடன் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் எனவும் தெரிவித்தனர்.

ஆனால் அதிபர் உத்தரவுப்படியும், உச்சநீதிமன்ற் உத்தரவுப்படியும் இப்போது இலங்கையில் எந்த கட்சியும் ஆட்சியில் இல்லாத நிலை உண்டாகி இருக்கிறது. இன்று பாராளுமன்றக் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டம் உலக மக்களின் எதிர்பார்ப்பை ஈர்த்து உள்ளது.