கைரோ:

கிப்து நாட்டில் நடைபெற்ற  அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அல்-சிசி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தற்போதைய அதிபராக உள்ள  அப்தெல் ஃபட்டா அல்-சிசி (Abdel Fattah el-Sisi),  நடைபெற்ற அதிபர் தேர்தலில் 92 % வாக்குகள் பெற்று அமோகமாக  வெற்றி பெற்று மீண்டும் அதிபர் ஆனார்.

கடந்த  2013- ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் காரணமாக அப்போதைய அதிபர், முகமது மோர்சியை கவிழ்த்துவிட்டு,  ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த அல்-சிசி, ஆட்சியைக் கைப்பற்றினார்.

அதன்பிறகு நடைபெற்ற 2014ம் ஆண்டு அதிபர் தேர்தலில், எந்தவித எதிர்ப்புமின்றி அல்-சிசி, வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அல்-சிசி 92 சதவிகித வாக்குகள் பெற்று அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.

அல்-சிசி ஆதரவாக 2.1 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எகிப்து அதிபராக அல் சிசி மீண்டும்  பொறுப்பேற்க உள்ளார்.