உ.பி. கிராமங்களில் இளைஞர்கள் அரைக்கால் சட்டை அணிய தடை..

 

முசாபர்நகர் :

மது ஊர் கிராமங்களில், நாட்டாமை- பஞ்சாயத்து செய்து ஊர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போல் உத்தரபிரதேச மாநிலத்தில் “காப்” எனப்படும் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

ஊராட்சி ஒன்றியம் போன்று பல்வேறு கிராமங்களை உள்ளடக்கியது, இந்த ‘காப்’ ஒன்றியம்.

அங்குள்ள முசாபர்நகர் பகுதியில் பல ஊர்களை அடக்கிய ‘காப்’ பஞ்சாயத்தின் கூட்டம் சிசோலி என்ற ஊரில் நiடைபெற்றது.

இந்த காப் பஞ்சாயத்து 4 ஆண்டுகளுக்கு முன்னர் , கிராமத்து பெண்கள் ‘’ஜீன்ஸ்’ அணிய தடை விதித்தது. இதன் பலனாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அந்த பகுதியில் குறைந்துள்ளன.

இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் இளம் பெண்கள் அளித்துள்ள புகார் குறித்து, சிசோலியில் நடந்த ‘காப்’ பஞ்சாயத்தில் விவாதிக்கப்பட்டது. தங்கள் பகுதிக்கு உள்பட்ட ‘’காப்’’ பஞ்சாயத்தில் இளைஞர்கள் யாரும் அரைக்கால் சட்டை அணியக்கூடாது என தடை விதித்து, இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

“இந்த பகுதியில் இளைஞர்கள் யாராவது அரைக்கால் சட்டையுடன் திரிந்தால் அவர்கள் விவரத்தை ஊர் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதே பகுதியில் உள்ள மற்றொரு ‘காப்’பில் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

– பா.பாரதி