அக்கா… அது வெங்காயம் அக்கா…. தாமரைன்னு நினைச்சிட்டியளோ….! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பிக பாஜக வேட்பாளர் தமிழிசை போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி வேட்பாளராக திமுக எம்.பி. கனிமொழி களமிறங்கி உள்ளார். அங்கு இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது

இந்த நிலையில், தமிழிசை தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இடத்தில், அவருக்கு பலர் ஆரத்தி எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பெண், ஆரத்தி தட்டில், திருமண வீடுகளில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் ஆரத்தி தட்டுபோல, பெரிய வெங்காயத்தில் தாமரை போல வடிவமைத்து, அதைக் கொண்டு ஆரத்தி எடுத்தார்.

தூத்துக்குடி தொகுதியை சேர்ந்த ஏரல் அருகே உள்ள  எப்போதும்வென்றான் வாக்கு சேகரிக்க சென்றபோது, அவரை வரவேற்று ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.  அதில், ஒரு பெண் ணின் ஆரத்தித் தட்டில் இருந்த தாமரைப் பூவுடன்  இரட்டைஇலையைக் குறிக்கும் வகையில், அரச மர இலை வைக்கப்பட்டு அதனுடன் சிறிய மெழுகுவத்தி ஏற்றி ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இது பார்ப்பதற்கு தாமரை போல இருந்ததால், தமிழிசை தாரை மலர்களை  கொண்டு தனக்கு ஆரத்தி எடுப்பதாக முதலில்  நினைத்துக்கொண்டார். பின்னர் உன்னிப்பாக பார்த்தபோதுதான், அது வெங்காயம் என தெரிந்தது.

இருந்தாலும் சுதாரித்துக்கொண்ட தமிழிசை, இதுபோன்ற ஆரத்தி தட்டுக்களை தன்னை வெகுவாக ஈர்த்து இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்திலும் அப்லோடு செய்து பதிவிட்டிருந்ததார்.

அவர்து பதிவில், “தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி களுக்கு உட்பட்ட போடுபட்டி கிராமத்தில் இரட்டை இலையில் தாமரையை மலர வைத்து வரவேற்பளித்த சகோதரிகளுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழிசையின் டிவிட்டை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே பாஜக தலைவர்கள் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று குரல் கொடுத்து வருவதை கடுமையாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்,. வெங்காயத்தில ஆரத்தி எடுத்திருப்பதையும் கலாய்த்து வருகின்றனர்.

அக்கா தூத்துக்குடியில் தாமரை மலராது வெங்காயம்தான் மலரும்னு என்றும்,  அக்கா உங்களுங்க்கு வெங்காயம்தான்… என்றும்… அக்காவுக்கு தாமரைப்பூ கொடுப்பதற்கு பதிலாக வெங்காயத்தை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்றும் செமையாக கலாய்து வருகின்றனர்…

அக்காவுக்கு இப்போதெல்லாம் வெங்காயத்தை பார்த்தாலே தாமரைபோலத்தான் தெரிகிறது போல….. ஆகாயத்தாமரை கேள்விப்பட்டிருக்கிறோம், வெண் தாமரை கேள்விபட்டிருக்கிறோம்… ஆனால் தற்போதுதான் வெங்காயத்தாமரை பார்த்திருக்கிறோம்.. என்றும் கலாய்த்துள்ளனர்…

அக்கா… அது வெங்காயம் அக்கா…. தாமரைன்னு நினைச்சிட்டியளோ….!  . உங்களப் பார்த்தா பாவமா இருக்கு அக்கா”  என்பது போல கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன…