டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்துக்கு எதிரான பாலியல் புகார் வழக்கில்,  முக்கிய தடயங்களாக கருதப்படும் பென் டிரைவ், மடிக்கணினி ஆகியவற்றை பாஜக தலைவர் ரதோர் போலீசில் ஒப்படைத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்துக்கு சொந்தமான சட்டக் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி, சின்மயானந்த் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டினார்.

அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி சிறப்பு விசாரணை குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமித்தது. அதனை தொடர்ந்து சின்மயானந்த் கைது செய்யப்பட்டார்.

2 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகார் சொன்ன மாணவி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி மாயமானார். பின்னர் அதே மாதம் 30ம் தேதி ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் அளித்த புகாரில், ரதோர் கைது செய்யப்பட்டார். புகாரில், அஜித் சிங் என்பவர் தம்மிடம் இருந்த பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை பறித்து விட்டதாக கூறினார்.

அஜித்  சிங், இந்த வழக்கில் ஏற்கனவே கைதான விக்ரம் என்பவரது உறவினராவார். அவருடன் தான் இருந்ததாக ரதோர் கூறியதால் சிறப்பு விசாரணை குழுவினர் அவரை விசாரித்தனர்.

பின்னர் அவரை கைது செய்தனர். ரதோரிடம் 12 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், பாலியல் வழக்கில் முக்கிய தடயங்களாக கருதப்படும் பென் டிரைவ், மடிக்கணினி ஆகியவற்றை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தார்.