உட்கார்ந்து வேலை செய்ய அனுமதி கோரி கேரளாவில் துணி, நகைக்கடை தொழிலாளர்கள் போராட்டம்

திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் உள்ள  பிரபலமான கடைகளில் வேலை செய்துவரும் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்கார்ந்து வேலை செய்ய அந்த நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. சென்னையிலும் பிரபலமான நகைக்கடைகள், துணிக்கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் உட்கார அனுமதிக்கப்படுவில்லை.

இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடைகளில் பணிபுரியும் இளம்பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதையடுத்து, அவர்கள் உட்கார்ந்து வேலை செய்யும் வகையில், ஸ்தான சட்டத்தை திருத்த மாநில அரசு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்து உள்ளது.

போராட்டத்தில் குதித்த கேரள இளம்பெண்கள்

கேரளாவில் உள்ள  பிரபலமான நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்ற மால்களில் பணி புரிந்து வரும் ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள், முதியோர்கள்  தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தினரால், வேலை நேரத்தின்போது உட்கார அனுமதிப்பது இல்லை. கடைகளில்  வாடிக்கை யாளர்கள் இல்லாத நிலையிலும் நின்றுகொண்டேதான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படு கிறார்கள்.

சுமார் 12 மணி நேரம் அவர்கள் நின்றுகொண்டே பணியாற்றுவதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களை  உட்கார்ந்து வேலை செய்ய நிறுவனங்கள்  அனுமதிக்க வேண்டும் என்றும், அரசு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கேரளாவில் துணி மற்றும் நகைக்கடை களில் பணியாற்றி வரும்  தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து கேரள மாநிலஅரசு, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு தொழிலாளிக்கும்  அவர்கள் வேலை செய்யும் போது “உட்கார்ந்து”  தங்களது பணிகளை  செய்ய உரிமை உண்டு என்று தெரிவித்து உள்ளது.

இந்த விதி  ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகள்  போன்ற  வணிகரீதியான நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு ஸ்தாபனச் சட்டத்தை திருத்துவதற்காக மாநில அரசு முயற்சி  மேற்கொண்டு வருவதாகவும தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக  உட்கார்ந்து வேலை செய்ய அனுமதி கோரிய பெண்களுக்கு நிவாரணம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இனிமேல் அவர்கள் உட்கார்ந்தே வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவையை தொடரலாம்.

You may have missed