தெலுங்கில் `சீதா ஆன் தி ரோட்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

கல்பிகா கணேஷ், கதேரா ஹகிமி, காயத்ரி குப்தா, நேசா ஃபர்ஹதி மற்றும் உமா லிங்கையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை பிரனீத் யாரோன் என்ற இளம் இயக்குநர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையும் அவரே அமைத்துள்ளார். Zee plex-ல் இந்த திரைப்படம் வரும் மார்ச் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஐந்து பெண்களின் வாழ்க்கைப் பயணம், பெண் சுதந்திரம், அவர்களின் கனவு மற்றும் அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் சவால்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரனூப் ஜவகர் மற்றும் பிரியங்கா ததி ஆகியோர் இந்தப்படத்தை தயாரித்துள்ளனர்.

https://youtu.be/bADpv5B9-88