பாஜக நாட்டின் உயரிய அமைப்பை சேதப்படுத்துகிறது : தலைவர்கள் கண்டனம்

டில்லி

பாஜக நாட்டின் உயரிய அமைப்ப்க்களை பாஜக சேதப்படுத்தி அழித்து வருகிறது என சீதாராம் யெச்சூரி மற்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் உயரிய அமைப்பான சிபிஐ இயக்குனரான அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகியோரிடையே மோதல் வலுத்து வருகிறது. கடந்த 15 ஆம் தேதி ராகேஷ் அஸ்தானா மீது கடந்த 15 ஆம் தேதி சிபிஐ வழக்கு பதிந்தது. அதை ஒட்டி இணை இயக்குனர் நாகேஸ்வர ராவ் இயக்குனராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டரில், ““இந்திய நாட்டின் உயரிய அமைப்புகளை சேதப்படுத்துவதிலும், அழிப்பதிலும் பாஜக தலைமையின் பங்கு இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகரித்து உள்ளது.  பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் அரசியலமைப்பற்ற நடவடிக்கைகளுக்கு இது தேவை.ஆகும்

அவர்களது நேர்மையற்ற திட்டங்களுக்கு  சமரசம் செய்துகொள்ளும் அதிகாரிகள் கடந்த 4 ஆண்டுகளில் அதிக அளவில் நாட்டின் உயரிய அமைப்புகளில் உள்நுழைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அரசின் மோசமான நடவடிக்கைகள் மற்றும் விசாரணையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அரசியல் வாதிகளின் சதியும் ஆகும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம், “பாஜக ஆட்சியில் நமக்கென உள்ள கொள்கைகள் அனைத்தும் உடைந்து நொறுங்கி விட்டது. இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் நாட்டை பாஜக எடுத்துச் சென்றுள்ளது. இந்திய நாட்டின் அனைத்து உயரிய அமைபுகளும் குழறுபடியில் உள்ளன. அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசின் உறவு சீரழிந்துள்ளது. பிரதமர் மோடி அனைவரையும் ஏமாற்றி விட்டார்” என கூறினார்.