திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த சீதாராம் யெச்சூரி

--

சென்னை

ரும் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக சீதாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

 

மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை வந்துள்ளார். அவர் திமுக தலைவர் முக ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் அவர்கள் வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது டி ஆர் பாலு, ஆ ராசா, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சந்திப்பின் முடிவில் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்து சந்திப்பு பற்றி விளக்கி உள்ளார்.

அப்போது சீதாராம் யெச்சூரி, “வரும் தேர்தல்களில் தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் இந்திய மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பெருமைகளையும் நாட்டின் அரசியலமைப்பையும் காக்க இணைந்துள்ளோம்.” என தெரிவித்தார்.