டெல்லி:

த்திய நிதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.  காலை 11 மணி அளவில் அவை தொடங்கியதும், பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கியவர், சுமார் இரண்டரை மணி நேரத்தையும் தாண்டி தொடர்ந்து பேசினார்.

இதனால், அவரது தொண்டை வறண்டு, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் பட்ஜெட் சுருக்கி வாசிக்க சபாநாயகர் அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டு அவர் சுமடார் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு இரண்டரை மணி நேரத்தையும் தாண்டி அவரது பட்ஜெட் உரை நீண்டதால், அவருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது.

கணீரென்ற குரலில் பேசும் நிர்மலாவின் தொண்டை வறண்டதால், அவர் பேசுவதற்கு சற்று தடுமாறியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மீண்டும் பட்ஜெட்டை வாசித்தார். காலை 11 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் உரை 2.45 மணி யளவில் முடிவுற்றது.

சரியாக 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் மூலமாக இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றிலேயே முதல்முறையாக நீண்ட உரையை வழங்கிய சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார்.

2014ம் ஆண்டு மறைந்த முன்னாள் நிதி அமைச்ச்ர  அமைச்சர் அருண் ஜேட்லி 2 மணி நேரம் 10 நிமிடங்களும், 2003ல் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 2 மணி நேரம் 13 நிமிடங்களும் பட்ஜெட் உரையாற்றியுள்ளனர். அவர்களின் சாதனையை கடந்த ஆண்டு முறியடித்த நிர்மலா சீத்தாராம்ன், இந்த ஆண்டு அவரது சாதனையை மீண்டும் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்…