கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ நாராயணராவ் கொரோனாவுக்கு பலி….

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ நாராயணராவ் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  கர்நாடகாவின் பிதர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான பசவகல்யான் நாராயண ராவ் (வயது 66) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 1ந்தேதி பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 3:55 மணியளவில்  பலனின்றி எம்.எல்.ஏ சிகிச்சை உயிர் இழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்கள் சட்டமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட சக எம்எல்ஏக்கள் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தனர்.

இந்த தகவலை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவகுமாரும் உறுதிப்படுத்தி உள்ளார்.