டெல்லியில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைகிறது: அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படுவதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

டெல்லியில் கொரோனா நிலைமை எப்படி உள்ளது என்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: டெல்லியில் ஜூன் 30க்குள் கொரோனாவால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள், அதில் 60,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை 26,000 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கடின உழைப்பின் மூலமாகக் நிலைமை கட்டுப்படுத்த முடிந்தது. நமது முயற்சிகள் முன்பை விட வேகமாக தொடர வேண்டும்.

முன்னதாக 100 பேரில் 31 பேர் கொரோனா நோயாளிகளாக கண்டறியப்பட்டனர். ஆனால் இப்போது, 100 பேரில் 13 பேருக்கு தான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றார். டெல்லியில் கொரோனாவால் 87,360 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில், 2,742 பேர் உயிரிழந்துள்ளனர். 58,348 பேர் குணம் அடைந்து விட்டனர்.