கொரானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடிகர் சிவா…!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

அணைத்து திரையுலகினரும் வீட்டில் செய்யும் சிறு சிறு சேஷ்டைகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .அந்த வகையில் கொரோனா குறித்து விழிப்புரண்வு ஏற்படுத்தும் விதமாக நகைச்சுவை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கொரோனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் சிவா, “இனி மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், தூய்மையான சுற்றுபுறத்தை பாதுகாப்போம்” என வலியுறுத்துகிறார். குறிப்பாக இந்த வீடியோ கொரோனாவிற்கான வீடியோவாக இல்லாமல், மக்களுக்கான வீடியோவாக உள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.