சிவகங்கை தொகுதி: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரன் காலமானார்!

சிவகங்கை: சிவங்கை தொகுதியின் முன்னாள்  அதிமுக எம்எல்ஏ சந்திரன் உடல்நல குறைவால் இன்று காலமானார்.

கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வீடு திரும்பியவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு உடனடியாக கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில், தொற்று பாதிப்பு இல்லை என்று சோதனை முடிவு வந்ததால், நுரையிரல் பிரச்சினை தொடர்பாக சிகிச்சைஅளிக்கப்பட்ட வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயரிழந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர் கடந்த 2001ம் ஆண்டு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.