சென்னை,

ரும் 21ந்தேதி சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறந்து வைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை உயர்அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரே இடம் ஒதுக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மணி மண்டபத்தில் கட்டிட பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில், இறுதிக்கட்ட வேலைகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மணிமண்டபத்தினுள், தற்போது கடற்கரை சாலையில், ஐ.ஜி அலுவலகத்துக்கு எதிரே  உள்ள சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு, இந்த மணி மண்டபத்தில் நடுவில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவாஜி கணேசன் நினைவு நாள் இந்த மாதம் 21ந்தேதி வருகிறது.  அன்று அவரது மணி மண்டபத்தை திறந்து வைக்க அரசு முடிவுசெய்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

நடிகர் திலகத்துக்கு  ‘சுமார் 2,124 சதுர அடியில் ரூ.2.80 கோடி செலவில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 4 புறமும் உள்ளே செல்லும் வகையில் பாதை வசதியுடன்,  திராவிடர் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான சிற்ப கலை வேலை பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டப நடுவில் சிவாஜி கணேசன் சிலை, உட்புறத்தில் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையிலான புகைப்பட கண்காட்சிகள் இடம் பெறுகிறது