சென்னை

யக்குனர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் மீண்டும் சீமராஜா படத்தின் மூலம் இணைகிறார்கள்

பொன்ராம் இயக்கத்தில் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ’ரஜினி முருகன்’  ஆகிய இருபடங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.   தற்போது அவர்கள் இருவரும் மற்றொரு படத்தில் இணைந்துள்ளனர்.   நேற்று சிவகார்த்திகேயனின் 33ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் பெயரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படுள்ளது.

 

சீமராஜா என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, சூரி,  சிம்ரன், நெப்போலியன், மனோபாலா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.    டி. இமான் இசை அமைக்கிறார்.    சிவகார்த்திகேயனுடன் சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கும் முதல்படம் சீமராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.