இந்தி நடிகைக்கு கோலிவுட் ஹீரோ பாராட்டு..

நடிகர் சிவகார்த்திகேயன், இந்தி நடிகை சயாமி கெர் நடித்த சோகெட் என்ற படத்தை பார்த்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக பாராட்டியதுடன் அப்பட இயக்குனர் அனுராக் கஷ்யாப் மற்றும் பட குழுவுக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் தான் தயாரித்த கனா தமிழ் படத்தை பார்க்கும்படி சயாமியிடம் கேட்டிருந்தார்.

அதற்கு நன்றி சொன்ன சயாமி, சிறந்த படத்தை எடுத்திருப்பதாக சிவகார்தி கேயனுக்கு பாராட்டு தெரரிவித்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர் அதில் சயாமி நடிப்பார் என்று தெரிகிறது.