மித்ரன் படத்தில் பைக் ரேஸராக சிவகார்த்திகேயன்…!

‘Mr.லோக்கல்’ படத்தைத் தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ படத்தில் பைக் ரேஸராக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.இதற்காக பிரத்யேக பயிற்சிகள் எல்லாம் செய்தது மட்டுமன்றி, கொஞ்சம் உடலமைப்பை மாற்றியுள்ளார்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கார்ட்டூன் கேலரி