சிவகார்த்திகேயன் படம் ‘டாக்டர்’ 2வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு..

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் திரைக்கு வந்தது அப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முன்னதாக அவர் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படம் செம் ஹிட்டானது. மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக காத்தி ருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்து வெளியிடவுள்ள டாக்டர் படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.


சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் யூடியூபில் வெளியாகி பாராட்டுக்களை குவித்துக்கொண்டிருக் கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன.
படத்தில் இடம்பெறும் 2வது பாடல் வரும் வியாழன் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.