நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரியங்கா மோகன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டு அப்டேட்கள் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் நேற்று அறிவித்தனர்.

முதல் அப்டேட் காலை 11 மணிக்கும்,இரண்டாவது அப்டேட் மதியம் 3 மணிக்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் தீபாவளி ஸ்பெஷல் அப்டேட் வெளியாகியுள்ளது. தீபாவளி ஸ்பெஷல் போஸ்டருடன் இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.