மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்த புதிதாக மொபைல் கேம் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. ஹீரோ’ டீஸரில் வரும் ஹீரோ சின்னத்தைச் சேகரிக்க வேண்டும். Pokemon விளையாட்டைப் போல Augmented reality-யில் இந்த விளையாட்டை உருவாக்கியுள்ளது படக்குழு. இதனை இதுவரை 11,500 பேர் டவுண்லோட் செய்து விளையாடி வருகிறார்கள்.

யாரையும் தொந்தரவு செய்யாமல் இந்த கேமை விளையாடுமாறும், பைக்கில் போகும்போது விளையாட வேண்டாம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் செகென்ட் சிங்கிள் இம்மாதம் 29 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது .