நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணையும் ‘டாக்டர்’ …!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘டாக்டர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், யோகி பாபு, இளவரசு, ‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

டிசம்பர் 6-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது .

கார்ட்டூன் கேலரி