‘அருவி’ இயக்குநர் அருண் பிரபுவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்…!

கனா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் 3-வது படத்தை அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்க இருப்பதாக அறிவித்தார்.

அறிமுக இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: arun prabhu, Aruvi, sivakarthikeyan
-=-