சிவகார்த்திகேயன் வீடியோ பேச்சை வெளியிட்ட போலீஸ் அதிகாரி.. நடிகர் சொல்வதை கேளுங்கள்..

டிகர் சிவகார்த்திகேயன் தற்போது ரவி குமார் இயக்கும் ‘அயலான்’, நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது


ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது,’இதுவரை நான் சிகரெட் பிடித்தில்லை மது குடித்ததில்லை என் நண்பர்கள் அப்படி. ஒருபோதும் என்னை அவர்கள் சிகரெட் பிடிக்கவும் மது குடிக்க வும் கட்டாயப்படுத்தியதில்லை ‘என்ற துடன் உங்கள் பெற்றோர் சம்பாதித்த காசை சிகரெட்டுக்கும் மதுவுக்கும் செலவிட்டு உங்கள் உடல் ஆரோகியத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள்’ என்றார்
சிவகார்த்திகேயனின் இந்த இந்த வீடியோ வை நெல்லை துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் வெளியிட்டு ,’ நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க. குடிக்க , புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப் பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகி லிருந்து வெளி யேற அழைக்கிறான். என்று தான் வெளி யிட்டுள்ள மெஜேசில் பதிவிட்டிருக்கிறார்.