மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை:

டிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி உள்ள  சீமராஜா’ படம் வெற்றிகரமாக தியேட்டர்களில்  ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த புதிய படத்தை  `இரும்புத்திரை’ பட இயக்குநர்  பி.எஸ்.மித்ரன் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவன உரிமையாளர் ஆர்.டி.ராஜா  உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ராஜா தனதுடிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

`24 ஏ.எம்.ஸ்டூடியோஸின் புரொடக்‌ஷன்ஸ் எண் 7-வது படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பி.எஸ்.மித்ரனுடன் இணைவதில் மகிழ்ச்சி. மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். பி.எஸ்.மித்ரனும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

`இரும்புத்திரை’ படத்தில் சமூக கருத்தை முன்வைத்த மித்ரன், சமூகத்திற்கு தேவையான அரசியல் த்ரில்லர் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி