பட்டாசு தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

சிவகாசி

ஜி எஸ் டி 28% விதித்ததை எதிர்த்து சிவாகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தும் தொடர்கிறது

ஜுலை ஒன்று முதல் அமுலான ஜிஎஸ்டி வரி விதிப்பில் பட்டாசுப் பொருட்களுக்கு    28% வரி விதிக்கப்பட்டுள்ளது.  இதை தளர்த்தக் கோரி, கடந்த 30ஆம் தேதி முதல் அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இன்னும் சரியான தீர்வு எட்டாததால்,  மத்திய – மாநில அரசுகளுக்கு எதிர்ப்பை காட்டும் வகையில் தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது,   நாளை கூடும் பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர்கள் கூட்டத்தில் மேற்கொண்டு நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.