மோடிக்கு ஆதரவா?: நடிகர் சிவக்குமார் விளக்கம்

சென்னை

பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று தான் தெரிவிக்கவில்லை என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுடன் நடிகர் சிவக்குமார் இருக்கும் படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதோடு, “60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் செய்யாததை மோடி 4 ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளார். நம் நாடு மேலும் வளர்ச்சி பெற மோடி மீண்டும் பிரதமராக  இறைவனை பிரார்த்திக்கிறேன் –  நடிகர் சிவக்குமார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவக்குமாரின் நண்பரும் ஓவியருமான டி.பி.ஜெயராமன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“இந்த படத்தை ஒரு சங்கி பக்தர் பதிவிட்டிருந்தார். அதைக் கண்டதும் திரு சிவகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன்.

“சில தினங்களுக்கு முன்னர் பொன் ராதா கிருஷ்ணனும் வானதி சீனிவாசனும் என்னுடைய வீட்டுக்கு அவர்களாகவே வந்தனர்.

“நரேந்திர மோடி ஆட்சியின் நான்காண்டு சாதனைகள்” என்கிற புத்தகத்தை பரிசளித்தனர். அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு “உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை” என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றுவிட்டனர். இந்த படத்தில் சொல்லப்பட்டிருப்பது போல நான் எந்த கருத்தும் கூறவில்லை” என்று அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

அதாவது பா.ஜ.க. வினர் இதுபோல பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்பி வருகின்றனர்” என்று டி.பி. ஜெயராமன் குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி