ஜப்பான், சிகாகோ உலகத் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடத் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ தேர்வு…!

ஜப்பானில் நடைபெறும் ஃபுக்குவாக்கா உலகத் திரைப்பட விழாவிலும் சிகாகோவில் நடைபெறும் உலகத் திரைப்பட விழாவிலும் எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளைக் கொண்டு திரைக்கதையாக்கி வசனம் எழுதி இயக்குநர் வஸந்த் எஸ் சாய் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் போட்டிப் பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

இந்த திரைப்படம் 23-வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழா, திபுரான் உலக திரைப்பட விழா, அட்லாண்டா திரைப்பட விழா , அமெரிக்காவில் நடைபெற்ற நியுயார்க் மற்றும் கலிபோர்னியா திரைப்பட விழாக்கள், யுரேஷியாவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழா என இன்னும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்படது.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.